லேபிள்கள்

19.12.14

TNPSC: நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான 5-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 24-ந் தேதி தொடக்கம்.

நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான 5-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்புமற்றும் கலந்தாய்வு 24-ந்தேதி தொடங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான...

ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளுக்கான தேர்வு-1, 2011-13-ல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 13.06.2012-ல் அறிவிப்பு வெளியிட்டது. இப்பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 4.11.2012 அன்று நடைபெற்றது.அந்த தேர்வு தொடர்பாக நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு இதுவரை 4 கட்டகலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 120 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் பொருட்டு 5-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட 354 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

24-ந்தேதி தொடக்கம்:

அதன்படி, சிறப்பு பிரிவினர் (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஆதரவற்ற விதவை), பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 24-ந்தேதி காலை 8.30 மணிக்கும், கலந்தாய்வு வருகிற 26-ந்தேதி காலை 8.30 மணிக்கும் நடைபெறுகிறது.சிறப்பு பிரிவை சாராதவர்களுக்கு வருகிற 26-ந்தேதி காலை 8.30மணிக்கு சரிபார்ப்பு பணியும், 27-ந்தேதி காலை 8.30 மணிக்கு கலந்தாய்வும் நடைபெறும்.கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேற்கூறிய விவரங்கள் அடங்கிய சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உறுதி கூற இயலாது:

நடைபெற உள்ள நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டுப் பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் அடிப்படையிலும், தகுதி பெறுவதை பொருத்தும் எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பதவி ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மறுவாய்ப்பு:

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்ட்ட மேற்படி பட்டியலில் இடம் பெற்றுள்ள பதிவெண்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், எண்.3, பிரேசர் பாலச்சாலை, சென்னை-600 003 (பல் மருத்துவக் கல்லூரி மற்றும் கோட்டை ரெயில் நிலையம் அருகில்) என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட நாட்களில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக