லேபிள்கள்

19.12.14

கல்வித்துறையில் ரூ. 37 லட்சம் மோசடி:அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறையில் ௩7 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அதிகாரிகள், தலைமை ஆசியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.

திருநெல்வேலியில் 2013 அக்., 26ல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், அறநிலையத்துறை அமைச்சர் செந்துார்பாண்டியன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் உஷாராணி, அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் பங்கேற்றனர்.

அந்நிகழ்ச்சிக்கு 3 லட்ச ரூபாய் மட்டுமே செலவிட அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் உணவு, மேடை அலங்காரம், விழா மலர் தயாரித்தல், வரவேற்பு என பல பணிகள் தனியார் பள்ளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர்களிடம் தலா ஐந்து ரூபாய் வீதம் 23 லட்சம் ரூபாய் வசூலித்தனர்.பள்ளிகளின் நிர்வாகத்தினரிடமும் நன்கொடையாக 40 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். இதற்கான வரவு, செலவு கணக்கு முறையாக பராமரிக்கப்படவில்லை. இதுகுறித்து நெல்லையை சேர்ந்த வக்கீல் பிரம்மா, தமிழக முதல்வருக்கும், அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பினார்.

பணம் வசூலித்த 40க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், உதவி கல்வி அலுவலர்களிடம் நெல்லை போலீசார் விசாரித்தனர். இருப்பினும் ஒரு ஆண்டுக்கு பின் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். முதன்மைக் கல்வி அதிகாரி, நெல்லை, சேரன்மகாதேவி, தென்காசி உள்ளிட்ட கல்வி மாவட்ட அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் 10 பேர், ஊழியர்கள் என 15க்கும் மேற்பட்டோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவு களில் வழக்குப்பதியப்பட்டது.அப்போதைய முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு, தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரிகிறார்.

தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக