பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 14-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்காக இந்த ஆண்டு முதல்முறையாக தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
இணையதளத்தில் இருந்து தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட பிளஸ் 2 தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் மே 14 முதல் தங்களது பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றைப் பதிவு செய்து மாணவர்களே நேரடியாக தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டல்: விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் மே 8 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாள் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் தேவையா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்துகொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாள் நகல் கோருவோர் அதே பாடத்துக்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு இப்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு, மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கான விண்ணப்பக் கட்டணத்தை பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
சிறப்புத் துணைத்தேர்வு: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் மே 15 முதல் 20-ஆம் தேதி வரை தங்களது பெயரைப் பதிவு செய்யலாம். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தாங்கள் தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்யலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது.
சிறப்புத் துணைத் தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதரக் கட்டணமாக ரூ.35-ம், பதிவுக் கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக