அச்சுப்பணி தாமதமானதால், சட்ட கல்லூரிகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி, ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அறிவுறுத்தலின்படி, வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., படிப்பு எல்.எல்.பி., என்றும், எம்.எல்., படிப்பு எல்.எல்.எம்., என்றும் மாற்றப்பட்டு உள்ளது.
இந்நிலையில், 'பல்கலை ஹானர்ஸ் பி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்., - பி.சி.ஏ., ஆகிய எல்.எல்.பி., படிப்புகளுக்கு, மே 8ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று திட்டமிட்டபடி விண்ணப்பம் வழங்கவில்லை. விண்ணப்பம் வாங்க வந்த ஏராள மான பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர். விண்ணப்பங்கள் அச்சடிப்பதில் தாமதமானதால், திட்டமிட்டபடி வழங்கவில்லை. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக