பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் திருப்பூரை சேர்ந்த மாணவி பவித்ரா, கோவையை சேர்ந்த மாணவி நிவேதா ஆகியோர் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுவை தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 86 ஆயிரம் மாணவர்-மாணவியர்கள் எழுதினர். கடந்த மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையில் நடைபெற்ற இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன், சென்னையில் இன்று வெளியிட்டார். அப்போது அவர், தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.
இதில், திருப்பூர் மாணவி பவித்ரா (விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) மற்று கோவையை சேர்ந்த மாணவி நிவேதா (சவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) ஆகியோர் 1,192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து உள்ளனர்.
விக்னேஸ்வரன் (ஆர்.எஸ்.வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு), பிரவீண் (எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்), சரண்ராம் (எஸ்.எஸ்.எம்.லக்ஷ்மியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்) மற்றும் வித்யா வர்ஷினி (சௌவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி) ஆகிய மாணவர்கள் 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2 ஆம் இடத்தை 4 மாணவர்கள் பிடித்து உள்ளனர்.
நாமக்கல் டிரினிட்டி அகாடமிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் எடுத்து 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தில் 124 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். வேதியியல் பாடத்தில் 1049 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். உயிரியல் பாடப்பிரிவில் 387 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். தாவரவியல் பாடப்பிரிவில் 75 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக