லேபிள்கள்

9.5.15

196 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 3 மாணவியர் 1,172 மதிப்பெண்

பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில், 196 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மூன்று மாணவியர், 1,172 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகள் பிரிவில், மாநிலத்தில்
முதலிடம் பிடித்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வில் தமிழகம் முழுவதும், 90.6 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 
இதில், அரசு பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளை விட, 6 சதவீதம் குறைவாக, 84.26 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பள்ளிக் கல்வித்துறை நேரடி கட்டுப்பாட்டில், 2,700 பள்ளிகள் உள்ளன. 3 லட்சத்து,44 ஆயிரத்து, 189 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 79.11 சதவீத மாணவர்; 88.30 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சென்னை, செங்குன்றம் பெண்கள் பள்ளி மாணவி ராதா, சென்னை, அசோக் நகர் மகளிர் பள்ளி மாணவி ஏஞ்சல் மற்றும் கோவை அனையூர் அரசுப் பள்ளி மாணவி மல்லிகா அர்ஜுனன் ஆகியோர், 1,172 மதிப்பெண் பெற்று, அரசுப் பள்ளிகள் பிரிவில், மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளனர். கடந்த, 2012ல், 41 பள்ளிகள்; 2013ல் 100 பள்ளிகள்; 2014ல், 113 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றன. இந்த ஆண்டு, 196 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக