லேபிள்கள்

6.5.15

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்வது கூடாது,கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களை சேர்க்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தினர் அதன் தலைவர் அருமைநாதன் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக்
கல்வித்துறை செயலர் சபீதாவை சந்தித்து மனு அளித்தனர்.அம்மனுவில் கூறியிருப்ப தாவது:சென்னையில் சமீபத்தில் நடந்த தமிழ்நாடு நர்சரி, பிரை மரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி கள் சங்க வெள்ளிவிழா மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீ்ட்டில் சேர்க் கப்பட்ட குழந்தைகளுக்கான கட்ட ணத்தை தமிழக அரசு இதுவரை கொடுக்காமல் இருப்பதால் இந்த ஆண்டு முதல் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தமுடியாது.எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை, ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் மாநில அரசிடம் தடையில்லா சான்று பெறும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர். இந்த தீர்மானங்கள்மாணவர்-பெற்றோர் நலனுக்கு எதிரானவை.கல்வி உரிமைச் சட்டத்தின்படி இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசால் விதிக்கப்படும் நிபந்தனைகளை நிறைவேற்றிய பள்ளிகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும். மேலும் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்வது கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக