ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், 'கிரீமி லேயர்' உச்சவரம்பை, தற்போதைய, ஆறு லட்சம் ரூபாயில் இருந்து, 10.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்'என, பிற்படுத்தப்பட்டோருக்கான தேசியக் கமிஷன், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரை, பிரதமர் மோடி தலைமையிலான அரசால் ஏற்றுக் கொள்ளப்படுமானால், கோடிக்கணக்கான, ஓ.பி.சி., பிரிவினருக்கு, மத்திய அரசு வேலை மற்றும் கல்வியில், கூடுதல் இடஒதுக்கீடு கிடைக்கும்.தமிழகத்தில், 181 பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை உள்ளடக்கி, மத்திய அரசின், இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பட்டியல் உள்ளது; இந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளவர்களுக்கு, மத்திய அரசின் வேலை மற்றும் கல்வி வாய்ப்பில், 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, 1993 முதல், இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது; எனினும், அதற்கு முட்டுக்கட்டையாக, கிரீமி லேயர் என்ற அம்சம் உள்ளது.அதாவது, இதர பிற்படுத்தப்பட்டோர் என, வகைபடுத்தப்பட்டுள்ள ஜாதிகளில், தகுதியுள்ள அனைவருக்கும், 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை; மாறாக, அதில் கிரீமி லேயர் என்ற தனியான தரம் பிரிப்பு உள்ளது.அதாவது, ஆண்டுக்கு, ஆறு லட்சம் ரூபாய்க்கு கீழ் சம்பளம் அல்லது வருவாய் பெறும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் தான், 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது; அதை விட அதிக வருமானம் கொண்டவர்களுக்கு, இந்தசலுகை கிடைக்காது.
நிரப்ப முடியாத நிலை:
இதனால், மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில், 27 சதவீத இடஒதுக்கீட்டில், பாதியளவு கூட, இந்த பிரிவினரால் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.அதையறிந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன், இந்த சர்ச்சைக்குரிய கிரீமி லேயர் உச்சவரம்பை, தற்போதுள்ள, ஆறு லட்சம் ரூபாயிலிருந்து, 10.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, பரிந்துரை செய்துள்ளது.பொதுவாகவே, இது போன்ற கமிஷன்களின் பரிந்துரையை, அப்படியே மத்திய அரசு ஏற்றுக் கொள்வது இல்லை. ஆனால், இந்த முறை, பீகார் சட்டசபைக்கு,இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் வரவுள்ளதாலும், பீகாரில், ஓ.பி.சி., பிரிவினர் எண்ணிக்கை கணிசமாக உள்ளதாலும், அவர்களின் ஓட்டுகளை பா.ஜ., கவரும்விதத்தில், ஓ.பி.சி., கிரீமி லேயர் உச்சவரம்பு, 10.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இடஒதுக்கீடு:
பிற்படுத்தப்பட்டோர் தேசியக் கமிஷனின் இந்த பரிந்துரையை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், கிரீமி லேயர் உச்சவரம்பு பிரச்னையால், 27 சதவீத இடஒதுக்கீடு, முழுமையாக நிரப்பப்படும். அப்போது, அந்த பிரிவினருக்கு, மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில், கல்வி பயில்வதற்கான வாய்ப்பில் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
அமைச்சர்கள் நம்பிக்கை:
நாட்டின் முதல், ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்த பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, தான் சார்ந்துள்ள, ஓ.பி.சி., பிரிவினருக்கு நன்மை கிடைக்கும் விதத்தில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரையை ஏற்று, உத்தரவிடுவார் என நம்பப்படுகிறது.ஏனெனில், சமீபத்தில், பீகாரைச் சேர்ந்த, ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்த, மத்திய அமைச்சர்களான, ராம்கிருபால் யாதவ் மற்றும் உபேந்திர குஷ்வாஹா (பா.ஜ.,) ஆகியோர், பிரதமர் மோடியை சந்தித்து, ஓ.பி.சி., கிரீமி லேயரை உயர்த்த வேண்டும் என, கேட்டுக் கொண்டனர்.இதனால், பீகாரில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்றும், அதுமட்டுமின்றி, அடுத்து நடைபெற உள்ள, பிற மாநில சட்டசபைத் தேர்தல்களிலும், ஓட்டுகளை, பா.ஜ., அள்ளலாம் என, கூறியுள்ளதால், ஓ.பி.சி., கிரீமி லேயர், 10.50 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1 லட்சத்தில் துவங்கிய 'கிரீமி லேயர்':
இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் என்ற அம்சம், 1993ல் முதல் முதலாக, 1993ல் அறிமுகப்படுத்தப்பட்டது; அப்போது, 1 லட்சம் ரூபாயாக இருந்தது.அது, 2004ல், 2.5 லட்சம் ரூபாயாகவும், 2008ல், 4.5லட்சம் ரூபாயாகவும், 2013ல், ஆறு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.முன்னதாக, இரு விதமான கிரீமி லேயர் முறையை, பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரை செய்தது. நகர்புறங்களில், 12 லட்சம் ரூபாயாகவும், கிராமப்புறங்களில், ஒன்பது லட்சம் ரூபாயாகவும், ஓ.பி.சி., கிரீமி லேயரை உயர்த்த வேண்டும் என, கமிஷன் பரிந்துரைத்தது.ஆனால்,அதை செய்ய முன்வராத, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசு, ஒரே மாதிரியாக, ஆறு லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்தது.இதை, 10.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரையை, தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் முன்வைத்து உள்ளது.ஓ.பி.சி., கிரீமி லேயர் உச்சவரம்பு பிரச்னையால், 27 சதவீத இடஒதுக்கீட்டில், பாதியளவைக் கூட நிரப்ப முடியவில்லை. இவ்வளவுக்கும், மூன்று முறை, கிரீமி லேயர் மாற்றியமைக்கப்பட்டும், மத்திய அரசு பணிகளில், இந்த பிரிவினரின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கவில்லை. அதனால் தான், உச்சவரம்பை, 10.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
நீதிபதி வி.ஈஸ்வரய்யாதேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தலைவர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக