பத்தாவது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை, மாணவ, மாணவியருக்கு தபாலில் அனுப்புவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடிக்கும் மாணவ,மாணவியரின் பெயர் மற்றும் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது. கடந்த காலங்களில், மாணவர்கள் நேரடியாக சென்று பதிவு செய்ததால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கடும் நெருக்கடி ஏற்பட்டது. இப்பிரச்னையை தீர்க்க, பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது.
அதன்படி, மூன்று ஆண்டுகளாக, பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து வரும் பதிவு அட்டைகள், பள்ளிகளிலேயே மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகின்றன.மூன்று ஆண்டுகளாக, பல மாணவ, மாணவியர், வேலைவாய்ப்பு அட்டைகளை உரிய நேரத்தில் வாங்காததால், அவை கட்டுக்கட்டாக தேங்கிக் கிடக்கின்றன.குறிப்பாக, பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வி சேர்வதில் ஆர்வமாக உள்ளனர். பின், தனியார் நிறுவன பணியில் சேர்வதை லட்சியமாகக் கொண்டு, கேம்பஸ் தேர்வில் வேலைக்கும் சென்று விடுகின்றனர். அவர்கள் வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை வாங்குவதில், ஆர்வம் காட்டுவதில்லை. எனவே தான், பள்ளிகளில் அட்டைகள் தேக்கமடைந்து விடுவதாக, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.
எனவே, இந்த ஆண்டு மாணவ, மாணவியர் பெயர்களை, வேலைவாய்ப்பு அலுவலக, 'ஆன் - லைனில்' பதிவு செய்த பின், மாற்றுச் சான்றிதழுடன், அட்டைகளை வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒருவேளை, வேலைவாய்ப்பு பதிவு தாமதமாகி, மாணவ, மாணவியரும் குறிப்பிட்ட காலத்தில் வந்து வாங்காவிட்டால், அவர்களின் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பலாமா என்றும், கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக