லேபிள்கள்

7.5.15

அண்ணாமலைப் பல்கலை. பிஇ விண்ணப்ப விற்பனை தொடக்கம்: ஜூன் 5-ம் தேதி கடைசி தேதி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 2015-16ம் ஆண்டுக்கான பொறியியல் (பிஇ) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் கையேடு விற்பனை தொடக்கவிழா பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.



பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழக அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா விண்ணப்ப விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ஜே.வசந்தகுமார், தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ரத்தினசாமி, ஸ்ரீமாலினி, பொறியியல் புல முதல்வர் வேலுசாமி மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் புங்கேற்றனர்.

பின்னர் ஷிவ்தாஸ்மீனா செய்தியாளர்களிடையே தெரிவித்தது: அண்ணாமலைப் பல்கலையில் பொறியியல் புலத்தில் 10 படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை நடைபெறவுள்ளது. விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி ஜூன் 5-ம் தேதியாகும். விண்ணப்பங்களை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம், அனைத்து படிப்பு மையங்களிலும் ரூ.800 கட்டணம் (எஸ்சி., எஸ்டியினருக்கு ரூ.400) செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி அதற்கான தொகையை வரைவோலையாக இணைத்து விண்ணப்பிக்கலாம். அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவோர் ரூ 850 க்கான (எஸ்சி, எஸ்டி ரூ.450) ரூ50 அஞ்சல் கட்டணம் சேர்த்து சென்னை மாற்றத்தக்க வங்கி வரைவோலை பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெயரில் எடுத்து பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழக, அண்ணாமலைநகர் என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

ஜூன் மூன்றாவது வாரத்தில் தனி கவுன்சிலிங்: இந்த ஆண்டு பிஇ படிப்பிற்கு 2130 மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர். அண்ணாமலைப் பல்கலையில் தனி கவுன்சிலிங்க மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிப்பட்டியும், மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அவர்கள் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள்.

கலந்தாய்வு (இர்ன்ய்ஸ்ரீண்ப்ண்ய்ஞ்) ஜூன் மூன்றாவது வாரத்தில் நடத்தப்படும். அதற்கான தேதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில் பார்க்கவும். மேலும் auregr000ymail.com ஸ்ரீர்ம் என்ற மெயில் முகவரியையும் மற்றும் உதவி மைய தொலைபேசி எண்கள்: 04144 238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.

இரு தவணையாக கட்டணம் செலுத்தலாம்: இந்த ஆண்டு முதல், பிஇ பயிலும் மாணவர்கள் இரு தவணையாக கல்வி கட்டணத்தை செலுத்தலாம். அனுமதி சேர்க்கையின் போது முதல் தவணையையும், இரண்டாவது செமஸ்டரின் போது இரண்டாவது தவணையும் செலுத்த வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஏ கிரேடு பெற்ற பின்னர் நடைபெறும் முதல் கவுன்சிலங் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பொறியியல் புலத்தில் 210 மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக