லேபிள்கள்

3.5.15

எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்: தவறான கேள்விக்கு ‘மைனஸ் மார்க்’ வழங்க புதிய முறை

எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிடி படிப்புகளுக்காக நடத்தப்படும் ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பித் துள்ளனர். நுழைவுத் தேர்வில் தவறான கேள்விக்கு
மைனஸ் மார்க் வழங்குவதில் இந்த ஆண்டு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தமிழ்நாட்டில் முதுநிலை பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளிலும் (எம்இ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான்) எம்பிஏ, எம்சிஏ படிப்புகளிலும் சேர ‘டான்செட்’ எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு நடத் தப்படுகிறது.
இந்த ஆண்டு எம்சிஏ படிப் புக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மே 16-ம் தேதிகாலையும், எம்சிஏ நுழைவுத்தேர்வு அன்றைய தினம் மதியமும், எம்இ, எம்டெக், எம்.ஆர்க்., எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மே 17-ம் தேதி காலையும் நடைபெற உள்ளன. அண்ணா பல்கலைக் கழகம் இந்த தேர்வுகளை நடத்துகிறது.டான்செட் நுழைவுத் தேர் வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக இயக்குநர் (மாணவர் சேர்க்கை) பேராசிரியர் ஜி.நாகராஜன் கூறி யதாவது:டான்செட் நுழைவுத் தேர் வுக்கு இந்த ஆண்டு 40 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். டான்செட் நுழைவுத்தேர்வு தமி ழகம் முழுவதும் 86 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டு உள்ளிட்டவை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுகுறித்து விண்ணப்ப தாரர்களுக்கு விளக்கம் அளிக்க ஒவ்வொரு தேர்வு மையத்திலும் மே 15-ம் தேதி அன்று தகவல் மையம் இயங்கும். அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மையத்தில் மட்டும் மே 14, 15 இரு நாட்கள் அந்த மையம் செயல்படும்.டான்செட் நுழைவுத் தேர்வில் தவறாக அளிக்கப்படும் விடை களுக்கு மைனஸ் மார்க் வழங்கப்படும். கடந்த ஆண்டு வரையில் 4 கேள்விகளுக்கு தவறாக விடை அளித்திருந்தால் ஒரு மதிப்பெண் மைனஸ் செய்யப்பட்டு வந்தது.இந்த ஆண்டு, ‘மேட்’ உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளைப் போன்று 3 கேள்விகளுக்கு தவறாக பதில் அளித்திருந்தால் 1 மதிப்பெண் மைனஸ் செய்யப்படும்.இவ்வாறு பேராசிரியர் நாகராஜன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக