லேபிள்கள்

10.3.14

சி.பி.எஸ்.இ , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கும்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பிற்கான, 2014 அகடமிக் ஆண்டின் வகுப்புகளை, ஏப்ரல் 1ம் தேதிக்கு பதிலாக, ஏப்ரல் 15ம் தேதியிலிருந்து தொடங்குமாறு தனது பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு போதியளவு அவகாசம் கொடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திருத்தும் பணி ஏப்ரல் இறுதி வரை நீளும். எனவே, இந்த புதிய முடிவின் மூலமாக, திருத்துதல் பணியை தரமான முறையில் மேற்கொள்ள முடியும். ஏப்ரல் 1ம் தேதியே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை தொடங்குவதன் மூலமாக, பல பள்ளிகளில், தங்களின் ஆசிரியர்களை திருத்துதல் பணிக்காக அனுப்பவதில் சிக்கல்களை சந்திக்கும்.

இத்தகைய காரணங்களை அடிப்படையாக வைத்தே, ஏப்ரல் 15ம் தேதிக்கு மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக