பொறியியல் கல்லூரிகளில், 2014 - 15ல், பகுதி நேர பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான, விண்ணப்பப் படிவங்கள், இம்மாதம், 19ம் தேதியில் இருந்து, அடுத்த மாதம், 7ம் தேதி வரை, 10 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, சேலம்,
திருநெல்வேலி, பர்கூரில் உள்ள, அரசு பொறியியல் கல்லூரி; காரைக்குடி அழகப்பா கல்லூரி; வேலூர் பெரியார் கல்லூரி; கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி, இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி; மதுரை தியாகராஜர் கல்லூரி; சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆகியவற்றில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும்.
நேரடியாக அல்லது அஞ்சல் மூலமாக பெற விரும்புவோர், 300 ரூபாய்க்கான கேட்பு வரைவோலையை, "செயலர், பகுதி நேர பி.இ., அல்லது பி.டெக்., சேர்க்கை, கோவை' என்ற பெயரில், கோவையில் காசாக்கும் வகையில் எடுத்து, விண்ணப்ப மையங்களில், விண்ணப்பங்களை பெறலாம். தமிழகத்தை சேர்ந்த பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள், 150 ரூபாய் செலுத்தினால் போதும்.
தபாலில் விண்ணப்பங்களை பெற விரும்புவோர், கேட்பு வரைவோலையுடன், சுய விலாசமிட்ட தபால் உறையில், 50 ரூபாய்க்கு, தபால் தலை ஒட்டி, "செயலர், பகுதி நேர பி.இ., மற்றும் பி.டெக், சேர்க்கை, இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை' என்ற முகவரிக்கு, கடிதம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
மாணவர்கள், மே மாதம், கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கான அழைப்பு, உரியவர்
களுக்கு, தபால் மூலம் தெரிவிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஏப்ரல், 7ம் தேதிக்குள், அனுப்பி வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக