உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், சுயநிதி பிரிவிலும் பணியாற்றி, கூடுதல் சம்பளம் பெறும் நிலையை முறைப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், அரசு, அரசு உதவி, தனியார் என, ஏராளமான கல்லூரிகள் உள்ளன.
அனைத்து கல்லூரிகளிலும், சுயநிதி பாட பிரிவுகள் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், தனியார் கல்லூரிகளுக்கு நிகராக, சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். "அரசு உதவி பெறும் கல்லூரிகளில், அரசு சம்பளம் பெறும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், சுயநிதி பாடப்பிரிவில் வகுப்புகள் எடுக்கக் கூடாது' என்ற விதி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பல அரசு உதவி பெறும் கல்லூரிகளில், அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள், சுயநிதி பாடப்பிரிவுகளில் வகுப்பு எடுக்கின்றனர்; அதன் மூலம், கூடுதல் சம்பளம் பெறுகின்றனர். குறிப்பாக, சென்னையின் பிரதான பகுதியில் செயல்படும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சில, சுயநிதி பாட பிரிவுகளுக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்யாமல், அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்களையே பயன்படுத்துகின்றர். சுயநிதி பாட பிரிவுகளில், பல சிறப்பு பாடங்கள் இடம் பெற்றிருக்கும். இவற்றை படித்து, பேராசிரியராக பணியாற்றும் தகுதியுடன் பலர் உள்ளனர். ஆனால், அரசு உதவி பெறும் கல்லூரிகளின் இந்த நடவடிக்கைகளால், தகுதியானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
இதுகுறித்து, கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: கல்லூரி பேராசிரியர், அரசு சம்பளம் பெற்றால், "ரெகுலர்' வகுப்புகளை எடுக்கலாம்; சுய நிதி வகுப்புகளை எடுக்க கூடாது. மீறி எடுக்கும் போது, அதற்காக பெறும் சம்பளத்திற்கும், வருமான வரி கட்ட வேண்டும். இதனால், பலரும், "ரிஸ்க்' எடுக்க விரும்புவதில்லை. ஆனால், கல்லூரி நிர்வாகம், வற்புறுத்தும் போது, பாடம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஒரு சில கல்லூரிகள் மட்டுமே, இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன், இது போன்ற செயல்கள் நடப்பதாக செய்தி ?வளியானதும், கல்லூரி கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்தது. தற்போதும், இதுபோன்ற புகார்கள் எழுவதால், அரசு உதவி பெறும் கல்லூரிகளை, கல்லூரி கல்வி இயக்ககம் கண்காணிதது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக