பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை வேறுபாடு கருதாமல் பிஜி பதவி உயர்வு வழங்க வேண்டும்
என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். பொருளாளர் கவிதா, ஒன்றியத் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் பாலன், ஒருங்கிணைப்பாளர் கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அவிநாசி ஒன்றிய மகளிரணிச் செயலாளர் சாந்தாமணி வரவேற்றார். மாநிலப் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில துணைப் பொதுச்செயலாலர் அயூப், மாநில மகளிரணிச் செயலாளர் ஜேனட் பொற்செல்வி ஆகியோர் சிறப்பு விருந்திராகப் பங்கேற்று பேசினர்.
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை வேறுபாடு கருதாமல் பி.ஜி. பதவி உயர்வு வழங்க வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும். தொகுப்பூதிய பணிக் காலத்தை, ஆசிரியர்களின் பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய முன்னாள் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார். அவிநாசி ஒன்றியம், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக