குரூப் 2 எழுத்து தேர்வு மார்க் பட்டியலை தமிழ்நாடு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 4 வாரத்தில் வெளியிட உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு:நான் உள்பட பலர் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய குரூப் 2 எழுத்து தேர்வை 2012ல் எழுதினோம். நான் 300 கேள்விகளுக்கு 200 பதில் சரியாக எழுதினேன். நேர்முக தேர்வுக்கு எனக்கும் மற்றும் பலருக்கும் அழைப்பு வரவில்லை. கடந்த ஆண்டு நேர்முக தேர்வுக்கு அழைப்பு அனுப்பியதில் தவறுகள் நடந்துள்ளது. எனவே எழுத்து தேர்வு மார்க் பட்டியலை வெளியிட கோரி தமிழ்நாடு தேர்வாணையத்துக்கு பல முறை மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எழுத்து தேர்வு மார்க் பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். தேர்வாணையம் சார்பாக வக்கீல் நந்தகுமார் ஆஜராகி, மார்க் பட்டியல் வெளியிட முடியாது என்றார். இதை கேட்ட நீதிபதி, தற்போது தகவல் பெறும் உரிமை சட்டம் வந்துவிட்டது, எனவே மனுதாரர் கோரியபடி குரூப் 2ன் எழுத்து தேர்வு மார்க் பட்டியலை 4 வாரத்துக்குள் தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிடவேண்டும் என்று உத்தர விட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக