லேபிள்கள்

9.3.14

சாதனை மாணவர்களாக மாற்றும் கல்வி தேவை

 ""சாதாரண மாணவர்களை, சாதனை படைக்கும் மாணவர்களாக மாற்றும் கல்விமுறை தேவை,''என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசினார்.
மதுரை விரகனூர் வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டுவிழா நடந்தது. வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்து ராமலிங்கம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுரேஷ் குமார் வரவேற்றார்.

பொன்ராஜ் பேசியதாவது: "தூக்கத்தில் வருவதல்ல கனவு; தூங்கவிடாமல் வருவது கனவு' என்பார் அப்துல் கலாம். அவர், கண் பார்வையற்ற ஒரு பொறியியல் மாணவரை சந்தித்தார். அம்மாணவர், 4 ம் ஆண்டு படிக்கும்போது, 2 கம்பெனிகளை துவக்கினார். அவரால் சாதிக்க முடிந்ததை, எல்லா உறுப்புகளும் சரியாக உள்ள உங்களால், சாதிக்க முடியும். கடின உழைப்பின் மூலம் லட்சியத்தை அடையலாம். அறிவைத் தேடிப் பெற வேண்டும். தோல்வியை தோல்வியடையச் செய்ய வேண்டும். சாதாரண மாணவர்களை, சாதனை படைப்பவர்களாக மாற்றும் கல்விமுறை தேவை. நிலவில் தண்ணீர் உள்ளதை அமெரிக்கா, ஜெர்மனி விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்தியாவின் "இஸ்ரோ' இளம் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். பொறியியல் படிப்பு, பொருளாதாரத்தையே மாற்றியமைக்கக் கூடியது என்றார்.வேலம்மாள் மேலாண்மைக் கல்லூரி (எம்.பி.ஏ.,) இயக்குனர் செல்வராஜ், கரூர் வைஸ்யா வங்கி தலைமை நிர்வாக அலுவலர் கே.வி.ராவ் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக