லேபிள்கள்

14.3.14

போராட்டத்தில் கலந்த கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்???

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் மற்றும் 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதையடுத்து இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
இதையடுத்து தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்  என்றும், இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக