லேபிள்கள்

11.3.14

இயற்பியல் தேர்வு எளிது: பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியர் கருத்து

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், எதிர்பார்த்தபடி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதாரணமாக படிக்கும் மாணவர்களும் கூடுதல் மார்க் பெற வாய்ப்பு உண்டு' என மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர்.


டி.விக்னேஷ், (மாணவர், டி.டி. விநாயகர் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்): பாடத்தின் பின்பகுதியில் இருந்து, 12 வினாக்கள் மட்டுமே கேட்பது வழக்கம். இம்முறை 20 கேள்விகள் வரை கேட்கப்பட்டிருந்தன. இதனால், ஒரு மார்க் வினாக்களில் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு உண்டு. ஐந்து மார்க் வினாக்களில் கட்டாய வினாக்களாக கேட்கப்பட்டிருந்தவையும், மிக எளிமையாக இருந்தன. அதேபோல், 10 மார்க் வினாக்களும் எதிர்பார்த்தபடியே கேட்கப்பட்டிருந்தது மகிழ்ச்சி.

எம்.ஜெயலெட்சுமி, (மாணவி, கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி): கேள்விகள் அனைத்தும் 'புளு பிரிண்ட்' அடிப்படையிலேயே கேட்கப்பட்டிருந்தன. 1, 3, 5, 10 மார்க் கேள்விகள் உட்பட அனைத்தும், பாடப்புத்தகத்தின் பின்னால் உள்ள கேள்விகளே பெரும்பாலும் கேட்கப்பட்டிருந்தன. முக்கியமாக ஒரு மார்க்கில் 30 கேள்விகளில் 23 கேள்விகளும், 5 மார்க்கில் கணிதம் தொடர்பான கேள்வி, பாடப்புத்தகத்தில் உள்ளபடியே கேட்கப்பட்டிருந்தது. பாடத்தில் இருந்து சமமாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதிக மதிப்பெண் பெறுவேன்.

ஜெ.சண்முகத்தாய் (ஆசிரியை, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ராமேஸ்வரம்):ஒரு மார்க் கேள்விகளில் 3, 5 மட்டுமே கஷ்டமாக இருந்தது. 5 மார்க்கில் கட்டாய கேள்வி கூட ஈசியாக இருந்தது, பத்து மார்க் கேள்விகள் எளிதில் விடையளிக்கும் வகையில் இருந்தன. சராசரியாக படிக்கும் மாணவர்கள் கூட அதிக மார்க் பெற வாய்ப்புண்டு. சிலர் 'சென்டம்' எடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக