மாநிலம் முழுவதும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத்தேர்வை,
தேர்தலுக்குப் பின் நடத்த, தொடக்கக் கல்வித் துறை, முடிவு செய்துள்ளது.
தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. வரும், 26ல் இருந்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு துவங்குகிறது. இதற்கிடையே, இதர வகுப்பு மாணவ, மாணவியருக்கான, பொதுத்தேர்வும் நடக்கிறது. பள்ளிக் கல்வித் துறை கீழ் இயங்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 22 உடன், அனைத்து வகுப்புகளுக்கான தேர்வும் முடிந்துவிடுகிறது. எனவே, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு, ஏப்ரல் இறுதி வரை, வேலை நாள். இதனால், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, இந்த மாத இறுதியில் துவங்கி, ஏப்., இறுதி வரை, பொதுத்தேர்வு நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏப்., 23, 24 தேதிகளிலும், தேர்வு அட்டவணை உள்ளது. பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் தான் அமைக்கப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, ஏப்., 23, 24ல் நடக்க உள்ள தேர்வுகளை, தேர்தலுக்குப் பின் நடத்த, தொடக்கக் கல்வித் துறை, முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, ஓரிரு நாளில், அனைத்து பள்ளிகளுக்கும், இயக்குனரகம் தெரிவிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக