லேபிள்கள்

10.3.14

6 முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 16ம் தேதிக்குள் ஆண்டு தேர்வை நடத்தி முடிக்கும் வகையில் புதிய அட்டவணை
தயாரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஏப்ரல் கடைசி வாரம் வரை தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.  இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ம் தேதி  நடத்தப்பட உள்ளது. வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பதற்காக பள்ளிகளை ஏப்.22ம் தேதியே ஒப்படைக்க வேண்டும். எனவே இறுதித் தேர்வை முன்னதாக நடத்துவதற்காக புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9ம் வகுப்புகள் மற்றும் 11ம் வகுப்பிற்கு ஏப்ரல் 3ம் தேதி தொடங்கும் தேர்வு 16ம் தேதி வரை நடக்கிறது.

6 முதல் 8ம் வகுப்புக்கு 3ம் பருவ தேர்வு அட்டவணை வருமாறு:

ஏப். 3ம் தேதி (வியாழன்)    மொழிப்பாடம்

8ம் தேதி (செவ்வாய்)    ஆங்கிலம்

10ம் தேதி (வியாழன்)    கணிதம்

11ம் தேதி (வெள்ளி)    சுற்றுச்சூழல் மற்றும் உடற்கல்வி

15ம் தேதி(செவ்வாய்)    அறிவியல்

16ம் தேதி (புதன்)                சமூக அறிவியல்

இத்தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

9ம் வகுப்பிற்கான மூன்றாம் பருவதேர்வு அட்டவணை வருமாறு:

ஏப்.3ம் தேதி (வியாழன்)    மொழிப்பாடம் 1

8ம் தேதி( செவ்வாய்)    மொழிப்பாடம் 2

9ம் தேதி(புதன்)               ஆங்கிலம் முதல் தாள்

10ம் தேதி (வியாழன்)    ஆங்கிலம் இரண்டாம் தாள்

11ம் தேதி (வெள்ளி)    கணிதம்

12ம் தேதி (சனி)                உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல்

15ம் தேதி (செவ்வாய்)    அறிவியல்

16ம் தேதி (புதன்)                சமூக அறிவியல்

9ம் வகுப்பிற்கான தேர்வுகள் அனைத்தும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெறும். 9ம் வகுப்பிற்கான பிராக்டிக்கல் தேர்வுகள் அனைத்தும் மார்ச் 25ம் தேதிக்கு முன்னதாக நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுகளை ஏப்ரல் 16ம் தேதிக்குள் நடத்தி முடித்தாலும் ஏப்ரல் 22ம் தேதிக்குப் பிறகே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஏப்ரல் 10ம் தேதியுடன் தேர்வுகளை முடித்து விடுமுறை விட திட்டமிட்டுள்ளன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக