ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. அதில் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். சுமார் 20 ஆயிரம் பேர்
தேர்ச்சி பெற்றனர்.இதில் இட ஒதுக்கீட்டு பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து 150க்கு 82 மதிப்பெண்கள் (55 சதவீதம்) எடுத்த 48 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். முதல்கட்டமாக தாள் 1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று சான்று சரிபார்ப்பு தொடங்கியது. ஒரு மையத்துக்கு சுமார் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டனர்.நேற்றைய சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ள மொத்தம் 1250 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் சுமார் 40 பேர் வரவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக