லேபிள்கள்

28.3.14

10ம் வகுப்பு தேர்வெழுத பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி

தேனியில், ஆண்டிப்பட்டி அருகே முத்தனம்பட்டி அரசு பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத ஹால் டிக்கெட் மறுக்கப்பட்ட 10 மாணவர்களும், இனி நடைபெறும் தேர்வுகளை எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்று, தேர்வுத் துறை இயக்குநரகம், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கியுள்ளது.
இனி நடைபெறும்தேர்வுகளில் தேர்வெழுதவும், நடந்து முடிந்த தேர்வுகளை சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் எழுதவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
100 சதவீத தேர்ச்சி காட்ட படிப்பில் பின்தங்கிய 10 மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஹால்டிக்கெ வழங்காததால், அவர்களால் நடந்து முடிந்த தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளை எழுத முடியாமல் போனது. இது குறித்து செய்திகள் வெளியானதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு, மாணவர்கள் தேர்வெழுத அனுமதி பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக