வரி செலுத்துபவர்களுக்கு வசதியாக அனைத்து வரு மான வரி அலுவலகங் களும் சனி (29), ஞாயிறு(30) உட்பட வரும் 31 ஆம் தேதி வரை செயல்பட வேண் டும் என உத்தரவிடப்பட் டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான வரி வசூல் இலக்கு 6.36 லட்சம் கோடியாக நிர்ண யிக்கப்பட்டிருந்தது. வரு மான வரி துறை கணக் கீட்டின்படி கடந்த 20 ஆம் தேதி நிலவரப்படி நடப்பு நிதியாண்டுக்குள் 50,204 கோடி வரிவசூலிக்க வேண் டியுள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே உள் ளது. இதற்குள் இலக்கை எட்டியாக வேண்டும்.
இதுகுறித்து அனைத்து வருமான வரி முதன்மை ஆணையர்கள் மற்றும் இயக்குநர் ஜெனரல்களு டன் மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் ஆலோ சனை நடத்தியது.
அப்போது, வரி வசூ லில் ஈடுபட்டுள்ள ஊழியர் கள், கூடுதல் ஆணையர் கள், ஆணையர்கள், முதன்மை ஆணையர்கள் அனைவருக் கும் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுப்பு எடுக்கக்கூடாது. தலைமையகத்தை விட்டு எங்கும் செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
ஒருவேளை விடுப்பு எடுக்கவேண்டிய கட்டா யம் ஏற்பட்டால், சம்பந் தப்பட்ட மண்டலத்தின் வாரிய உறுப்பினர் பொறுப் பில் இருப்பவர் மட்டுமே விடுப்பு அளிப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளவர் என வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், வரி செலுத்து பவர்களுக்கு வசதியாக அனைத்து வருமான வரி அலுவலகங்களும் சனி (29), ஞாயிறு(30) உட்பட வரும் 31 ஆம் தேதி வரை செயல் பட வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்கள் குறித்து விவரங்களை சேகரித்து அபராதம் விதிப்பது பற்றி முடிவு செய்ய அனைத்து தலைமை அலுவலகங் களும் நேற்று முன்தினம் இயங்கின. அதுமட்டு மின்றி, ரிட்டர்ன் தாக்கல் செய்யாத 21.75 லட்சம் பேருக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
இவர்களில் விடுபட்ட வர்கள் 31 ஆம் தேதிக்குள் கணக்கு தாக்கல் செய் வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வர்களை கண்டறிந்து கடி தம் அனுப்பியதன் மூலம் 5 லட்சம் பேர் வரை கணக்கு தாக்கல் செய்துள்ளனர். சுமார் 1,900கோடி வரி வசூ லாகியுள்ளது.
பான் எண் வைத்திருந்து ரிட்டர்ன் தாக்கல் செய்யா தவர்கள் குறித்து கண்டறி வதற்கான முயற்சிகளிலும் வருமானவரித்துறை ஈடு பட்டுள்ளது. மேலும், அதிகமாக வரவு செலவு செய்யும் சுமார் 40 லட்சம் பேர் குறித்து வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது.
இவர்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் கணக்கு தாக்கல் செய்கிறார்களா என்பது குறித்து கண்காணிக் கப்படும். வருமான வரித் துறை புள்ளிவிவரத்தின் படி, நாடு முழுவதும் 40 லட்சத்து 72 ஆயிரத்து 829 பேர் தங்கள் சேமிப்பு கணக்குகளில் 10 லட்சத் துக்கு மேல் வைப்புத் தொகை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக