பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 26ம் தேதி தொடங்க உள்ளது. குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத் துறை செய்து வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன. இதையடுத்து 26ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 9ம் தேதி தேர்வு முடியும். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ்நாடு புதுச்சேரியை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பள்ளிகள் மூலம் சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். அவர்களுக்காக 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கும். தேர்வு நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள், பெற்றோர், கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை வைத்தும் ஏற்கெனவே அறிவித்தபடி தேர்வுகள் குறித்த நேரத்தில் நடக்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து 26ம் தேதி தொடங்க உள்ள தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக