உடுமலை அரசு நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி உட்பட கட்டமைப்பு வசதிகளை நோட்டீஸ்களாக வினியோகித்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகளை ஆசிரியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர்
எண்ணிக்கையினை அதிகரிக்கும் பொருட்டு, பள்ளி கல்வித்துறை துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கடந்த 2012-2013 கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வி முறையினை கொண்டுவந்தது. இதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஆங்கில வழி சேர்க்கை நடந்தது. மாணவர்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் பள்ளி ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.உடுமலையில் 98 அரசு துவக்க பள்ளிகள், 22 நடுநிலை பள்ளிகளில், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். கடந்த கல்வியாண்டில் 11 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழியில் மாணவர்கள் சேர்க்கை இருந்தது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என கல்வியாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கில் 2014ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையினை இம்மாதம் முதலே பள்ளி ஆசிரியர்கள் ஆரம்பித்து விட்டனர். இம்முயற்சியின் முதல் கட்டமாக பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், மாணவர் எண்ணிக்கை, பள்ளியின் சிறப்பு அம்சங்கள், மாநில அளவில் பள்ளி மாணவர்கள் செய்த சாதனைகள், மத்திய மற்றும் மாநில அரசின் சலுகைகள் பள்ளிக்கு தரப்பட்ட விபரங்கள் உள்ளிட்டவற்றை பெற்றோர்களுக்கு தெரிவிக்கும் வகையில் 'நோட்டீஸ் ' அச்சடித்து வெளியிட சில நடுநிலைப்பள்ளிகள் திட்டமிட்டுள்ளது. உடுமலை கல்வியாளர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளை விடுத்து தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு முக்கிய காரணம், தங்களின் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆசைதான். இதன் விளைவாக இன்று ஏராளமான அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. குறிப்பாக துவக்கப்பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு பத்திற்கும் கீழாக மாணவர்களின் எண்ணிக்கை உள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளி கல்வித்துறை இந்த ஆங்கில வழிக்கல்வி முறையினை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கவும், பெற்றோருக்கு அரசு பள்ளிகளின் மீது நம்பிக்கை உருவாகும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக