ஏப்ரல் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை மாதந்தோறும் சம்பளத்தில் Advance Tax ஆக தோராயமாக ஒரு தொகை (Cess சேர்த்து) வீதம் பிடித்தம் செய்து பிப்ரவரியில் துல்லியமாகக் கணக்கிட்டு எஞ்சியுள்ள தொகையை (Cess சேர்த்து) பிப்ரவரி சம்பளத்தில் முழுமையாகப் பிடித்தம் செய்து வருமான வரிக் கணக்கில் சரிக்கட்ட வேண்டியது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரின் கடமை. ஆனால் தவறுதலாகவோ இயந்திரக் கோளாறு காரணமாகவோ பணியாளர் மாறுதல் காரணமாகவோ பிப்ரவரி மாதச் சம்பளத்தில் முழுமையாகவோ பகுதியோ பிடிக்கப்படவில்லை என்றால் பின்வரும் நடைமுறையை மார்ச் 31க்குள் செய்ய வேண்டும்.
1. அத்தொகையை சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரின் (DDO) வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்த வேண்டும்.
2. DDOவிடம் YOURSELF FOR INCOME TAX என்ற பெயரில் அதே தொகைக்குக் காசோலை பெற வேண்டும்.
3. வருமான வரி அலுவலகத்தில் 281 எண்ணிட்ட சலான் பெற்று DDOவின் TAN எண் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
4. இந்த சலானுடன் காசோலையை இணைத்து வங்கியில் (SBI) செலுத்தி சலானின் அடிப்பாகத்திலுள்ள Acknowledgementன் பின்புறம் சம்பந்தப்பட்ட பணியாளரின் பெயர் மற்றும் PAN எண் எழுதிக் கொள்ள வேண்டும். இந்த சலானைப் பெற்றுப் பத்திரமாக அலுவலகத்தில் பராமரிக்கப்படும் வருமானவரிப் பதிவேட்டில் ஒட்டிவிடவேண்டும்.
5. காலாண்டிற்கொருமுறை 24Q மின்கோப்புத் தாக்கல் செய்யும் போது இச்சலான் விவரங்களையும் சேர்த்து e-Filing பண்ண வேண்டும்.
(சலானின் நகலை சார்ந்த பணியாளரின் பிப்ரவரி மாத சம்பளப் பதிவேட்டிலும், அலுவலக ரொக்கப் பதிவேட்டிலும் ஒட்டிப் பராமரித்து தணிக்கையின் போது காண்பிக்க வேண்டும்)
* எக்காரணம் கொண்டும் வங்கியில் ரொக்கமாக வருமான வரி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
* மார்ச் 31க்குள் விடுபட்டுப் போன வரியை மேற்கூறிய விதம் செலுத்தி விடவும்.
* கூடுதல் தகவல்: கடந்த ஆண்டுகளில் இதுவரை 24Q தாக்கல் செய்யாமல் உள்ள அரசுத்துறை DDOக்களுக்கு நாளொன்றுக்கு ரூ.200 வீதம் விதிக்கப்பட்டிருந்த அபராதம் மத்திய வருமான வரித் துறையால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இம்மாதம் 31 ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும். தவறினால் அபராதம் விதிக்கப்படலாம்.
இத்தகவலை ஈரோடு வருமான வரி அலுவலக ஆய்வாளர் (TDS) திருமதி.முத்துலட்சுமி அவர்கள் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக