லேபிள்கள்

27.3.14

பாலியல் தொந்தரவு மீது நடவடிக்கை எடுக்காத அரசுப்பள்ளி தலைமையாசிரியை 'சஸ்பெண்ட்'

மாணவியர் கூறிய பாலியல் தொந்தரவு மீது நடவடிக்கை எடுக்காத அரசுப்பள்ளி தலைமையாசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை, மேலவெள்ளுர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவியரை, ஓவிய ஆசிரியர் ஞானஉதயம், 45, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக,
கடந்த பிப்., 16ல், புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதில், ஆசிரியருக்கு ஆதரவாக, பள்ளி தலைமையாசிரியை சீதா செயல்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவியரை, மிரட்டியதாக புகார் எழுந்தது. ஞானஉதயம் மற்றும் தலைமையாசிரியை மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில், தலைமையாசிரியை சீதாவை, கல்வித்துறை, சஸ்பெண்ட் செய்து, நேற்று உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக