லேபிள்கள்

5.3.14

பகுதி நேர பி.இ., சேர்க்கை அறிவிப்பு 19 முதல் விண்ணப்பம் வினியோகம்

பகுதி நேர, பி.இ., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம், வரும், 19ம் தேதி முதல், ஏப்ரல், 7ம் தேதி வரை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு
உள்ளது. கோவை, சேலம், நெல்லை, பர்கூர், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள, அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி - அழகப்பா பொறியியல் கல்லூரி, கோவை - பி.எஸ்.ஜி., கல்லூரி, கோவை - இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை - தியாகராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆகிய, 10 கல்லூரிகளில், விண்ணப்பம் வழங்கப்படுகிறது. எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவு மாணவ, மாணவியர், 150 ரூபாய்க்கும், இதர பிரிவினர், 300 ரூபாய்க்கும், "செயலர், பகுதி நேர, பி.இ., - பி.டெக்., சேர்க்கை, கோவை' என்ற முகவரிக்கு, டி.டி., எடுத்து வழங்கி, விண்ணப்பங்களை பெறலாம். மே மாதம், கலந்தாய்வு நடக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஏப்ரல், 7ம் தேதிக்குள், "செயலர், பகுதி நேர பி.இ., - பி.டெக்., சேர்க்கை, கோவை தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோவை - 641014' என்ற முகவரிக்கு, அனுப்ப வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக