தேர்வு நேரத்தில், "நீண்ட விடுப்பு' எடுத்துள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களின் விவரங்களை, பள்ளி வாயிலாக, பள்ளிக்கல்வி இயக்குனர் சேகரிக்க
உத்தரவிட்டுள்ளதால், லீவுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள்
கலக்கத்தில் உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, இம்மாதம் 26ம் தேதியும் துவங்குகிறது. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், மற்ற வகுப்புகளுக்கும், கடந்த ஆண்டை காட்டிலும், முன்னதாகவே நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களது குழந்தைள் பிளஸ், 2 தேர்வுக்கு தயாராவதற்கு, உதவி செய்யும் வகையில், பல ஆசிரியர்கள் நீண்டவிடுப்பு எடுக்க திட்டமிட்டிருந்தனர். இதில் பலரும் முன்கூட்டியே மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர். பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு செல்லும் நிலையில், ஆசிரியர்கள் விடுப்பில் செல்லும் போது, கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக, செய்தி வெளியானது.
இதையடுத்து, ஒவ்வொரு பள்ளி வாயிலாக, எந்தந்த ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர் என்ற விவரங்களை சேகரித்து கொண்டு வருமாறு, முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் இதனால், கலக்கத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக