பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும், தேர்வு நாளன்று காலை 9.30 மணிக்கு, தேர்வு மையத்தில் கட்டாயம்
இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை (மார்ச் 3) துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 59 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 897 தனித்தேர்வர் உட்பட, 169 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 23,606 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். முதன்மை கண்காணிப் பாளர்கள் 59, துறை அலுவலர்கள் 82, அறை கண்காணிப்பாளர்கள் 1,181 என 1,322 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களும், தேர்வு நாளன்று, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில், காலை 9.30 மணிக்கு கட்டாயம் இருக்க வேண்டும்; தாமதமாக வரக்கூடாது. தேர்வு எழுதும் மாணவர்களை 9.50 மணிக்கு அறைக்குள் அனுமதிக்க வேண்டும். 9.55 மணிக்கு, வினாத்தாள் பண்டலை பிரிக்க வேண்டும்; 10.00 மணிக்கு, வினியோகிக்க வேண்டும். 10 நிமிடங்கள், வினாத்தாள் படிக்க நேரம் ஒதுக்கப்படும். 10.10 மணிக்கு விடைத்தாள் வழங்க வேண்டும். தேர்வு மணி ஒலித்தபின், 10.15 மணிக்கு, மாணவர்களை விடைத்தாளில் எழுத அறிவுறுத்த வேண்டும்; 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும்.இடையிடையே மணி ஒலிக்கும்போது, அப்போதைய நேரத்தை தெரிவிக்கலாம். 1.10 மணிக்கு, தேர்வு முடிவடைய இன்னும் ஐந்து நிமிடங்களே உள்ளன என்பதை, மாணவர்களுக்கு நினைவுபடுத்தி, விடைகளை துரிதமாக எழுதி முடிக்க அறிவுறுத்த வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக