லேபிள்கள்

6.3.14

அரசு ஊழியர்கள் "ஜாலி' : பணி மாறுதல் இல்லை

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள், அமலாகி உள்ளன. இதனால், அடுத்த, இரண்டு மாதங்களுக்கு
பணி மாறுதல் இருக்காது என்பது, அரசு ஊழியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், 15 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசு விதிப்படி, ஒரு ஊழியர், ஒரு பணி இடத்தில், குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகளுக்கு, தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
ஆனால், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், "நிர்வாக காரணம்' எனக் கூறி, தங்களுக்கு வேண்டிய ஊழியர்களை, விரும்பிய பணியிடத்திற்கு மாறுதல் செய்வர். இதனால், பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதி, நேற்று, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள், நேற்று, முதல் நடைமுறைக்கு வந்தன. இதனால், அடுத்த இரு மாதங்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, பணி மாறுதல் இருக்காது என, தெரிகிறது. இதுகுறித்து, அரசு ஊழியர்கள் சிலர் கூறுகையில்,"தேர்தல் நடத்தை விதி அமலாகி இருந்தாலும், அரசுக்கு, வேண்டப்படாத ஊழியர்களுக்கு, முன் தேதியிட்டு, பணி மாறுதல் வழங்குவர்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக