லேபிள்கள்

6.3.14

ஆசிரியர்கள் இன்று "ஸ்டிரைக்' பிசுபிசுக்கும் என எதிர்பார்ப்பு

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, இன்று வேலை நிறுத்தம் செய்கின்றன. இந்த போராட்டம்,
பிசுபிசுக்கலாம் என, கல்வித் துறை எதிர்பார்க்கிறது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் உள்ளிட்ட, ஆறு சங்கங்கள் இணைந்து, இன்று வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளன. எனினும், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, பட்டதாரி ஆசிரியர் முன்னேற்றக் கழகம், ஆசிரியர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட, மேலும் சில சங்கங்கள், போராட்டத்தில் பங்கேற்க மறுத்து விட்டன. இதனால், ஆறு சங்கங்களின் போராட்டம், பிசுபிசுத்துவிடும் என, கல்வித் துறை வட்டாரம் எதிர்பார்க்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக