தமிழகம் மற்றும் புதுச்சேரி யில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நேற்று துவங்கியது. 8.26 லட்சம் மாணவ, மாணவியர், உற்சாகமாக தேர்வில்
பங்கேற்றனர். நேற்று நடந்த, மொழி முதற்தாள் தேர்வு, மிகவும் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில், 2,210 மையங்களிலும், புதுச்சேரியில், 32 மையங்களிலும், நேற்று, மொழி முதற்தாள் தேர்வு நடந்தது. காலை, 10:15க்கு துவங்கிய தேர்வு, பகல், 1:15க்கு முடிந்தது.
"பார்கோடிங்' : இந்த தேர்வில், பல்வேறு புதிய திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு உள்ளன. பெயர், பாடத்தின் பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை, கையால் எழுதும்போது, பல மாணவர்கள், தவறு செய்தனர். இது போன்ற பிரச்னை ஏற்படுவதை, முற்றிலும் தவிர்க்கும் வகையில், தேர்வுத் துறையே, அனைத்து தகவல்களையும் அச்சிட்டு, மாணவர் புகைப்படம், "பார்கோடிங்' முறை என, பல திட்டங்களை, இந்த தேர்வில் அமல்படுத்தி உள்ளது. இந்த தகவல்கள் அடங்கிய, விடைத்தாள் முதல் பக்கத்தில், மாணவர்கள், கையெழுத்து மட்டும் போட்டால் போதும் என்ற நிலை இருந்தது. நேற்று, மாணவர்களுக்கு, விடைத்தாள் வழங்கியதும், அதன் முதல் பக்கத்தில், கையெழுத்து மட்டுமே போட்டுவிட்டு, நேரடியாக, விடை எழுத ஆரம்பித்தனர். சென்னை, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேர்வை முடித்து ?வளியே வந்த மாணவ, மாணவியர், "மொழித்தாள் தேர்வு, மிகவும் எளிதாக இருந்தது' என, உற்சாகமாக கூறினர். இந்த மையத்தில், 565 மாணவ, மாணவியர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். 11 மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆனதாக, மைய அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக, தனித் தேர்வு மாணவர்கள் தான், "ஆப்சென்ட்' ஆவர். ஆனால், "ரெகுலர்' மாணவர்கள், 11 பேர், தேர்வுக்கு வராதது, ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. எனினும், எவ்வித குழப்பமும் இல்லாமல், முதல் தேர்வு நடந்து முடிந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக