ஆறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, தமிழக அரசுக்கு, 6 கோடி ரூபாய் வரை, மிச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க கல்வித்துறை சார்ந்த, ஆறு ஆசிரியர் சங்கங்கள், நேற்று ஒருநாள், வேலை நிறுத்த போராட்டம் நடத்தின. இதை முறியடிக்க, தொடக்க கல்வித்துறை, பல நடவடிக்கைகளை எடுத்தது.
போராட்டத்தால், அரசுக்கு, 6 கோடி ரூபாய், மிச்சம் ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர். தொடக்க கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'மாநிலம் முழுவதும், 30 ஆயிரம் ஆசிரியர் தான், 'ஆப்சென்ட்!' இதனால், பள்ளிகளுக்கு, பெரிய அளவில், பாதிப்பு ஏற்படவில்லை. உபரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்களை வைத்து, சமாளித்துவிட்டோம். வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர் அனைவருக்கும், சம்பளம் பிடித்தம் செய்வதுடன், துறை ரீதியான நடவடிக்கையும் எடுப்போம்' என, தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக