லேபிள்கள்

2.3.14

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு  2013 ஆம் ஆண்டு பிற ஓன்றியங்களுக்கு, பிற மாவட்டங்களுக்கு
மாறுதல் பெற்று செல்வதற்கு கலந்தாய்வு நடைபெறவில்லை.  காரணம் இடைநிலை ஆசிரியர்கள் தொடுத்த இரட்டை பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடையாணை ஆகும். தற்போது இரட்டை பட்ட வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு பட்டதாரி ஆசிரியர்கள் பிற ஒன்றியங்களுக்கு மற்றும் பிற மாவட்டங்களுக்கு மாறுதல் பெறும் கலத்தாய்வு இனி அடுத்த கல்வி ஆண்டு அதாவது ஜீன் மாதம் தான் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் சூழ்நிலை உள்ளது.

           பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு இரட்டை பட்டத்தை தகுதியானதாக மாற்ற நீதிமன்றத்தை அணுகியவர்கள் இன்று பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு கலந்தாய்வு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களே தவிர பட்டதாரி ஆசிரியர்கள்  மாவட்ட மாறுதலும் வைக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதில்லை.


      இதுவரை பதவி உயர்வு பெறமுடியாமல் தவித்து வந்த தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இப்போது மாறுதல் கலந்தாய்வு நடைபெறதாதல் தாங்கள் என்ன பாவம் செய்தோம் என புலம்புகின்றனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக