அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளில் செய்முறை தேர்வு மற்றும் பொதுத்தேர்விற்கு தயாராகும் நேரத்தில், "பணி நிரவல்' மூலம் பட்டதாரி ஆசிரியர்களை இடமாறுதல் செய்ததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என, ஆசிரியர் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவுப்படி, அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளில் 40:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சில அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால், கூடுதலாக இருக்கும் ஆசிரியர்கள் இடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.இதன்படி, தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் "பணி நிரவல்' மூலம் மாறுதல் செய்யப் பட்டுள்ளனர். பொதுத்தேர்வு நேரத்தில் கூடுதல் ஆசிரியர்களை மாற்றியதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என, ஆசிரியர்கள் சங்கத்தினர், கல்வியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில், ""40:1 விகிதாச்சார அடிப்படையில், மாறுதல் செய்ய பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், செய்முறை, பொதுத் தேர்வு நேரத்தில் மாறுதல் செய்ததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனிமேலாவது கல்வியாண்டின் துவக்கம் அல்லது தேர்வு விடுமுறை காலத்தில், "பணி நிரவல்' மாறுதல் செய்யவேண்டும்,'' என்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக