புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 10 -ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதே தேதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி பிளஸ்.2 அரசு பொதுத்தோóவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா. அருள்முருகன் வெளியிட்ட தகவல்:
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா வருகிற 10 - -ம் தேதி(திங்கள்கிழமை) நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனினும், அன்றைய தினம் பிளஸ்.2 அரசு பொதுத்தோóவு அரசால் ஏற்கனவே அறிவித்த கால அட்டவணைப்படி நடைபெறும். எனவே மாணவர்கள் அனைவரும் தவறாமல் தேர்வில் பங்கேற்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக