லேபிள்கள்

7.3.14

வாக்காளர் பெயர் சேர்க்க பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களே, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் என்பதால், அவர்களிடமே விண்ணப்பத்தைப் பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம்

வாக்காளர் பட்டியலில் இப்போது வரையிலும் பெயர் இல்லாதவர்களும், இனிமேல் பெயர் சேர்த்து, வரும் லோக்சபா தேர்தலில்
ஓட்டுப்போடுவதற்கு இன்னும் ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது. லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் கமிஷன் புதிய வாக்காளர்களுக்கும், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் இருப்பவர்களுக்கும், பெயர் விடுபட்டவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது; மார்ச் 9ல் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொண்டு, இந்த தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.  இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அவர்களுக்குரிய ஓட்டுச்சாவடிகள், உள்ளாட்சி அலுவலகங்கள், தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களில், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, படிவம் -6, தவறை திருத்தம் செய்ய படிவம் -8, பெயர் நீக்கம் செய்ய படிவம் -7 கொடுக்கலாம்; ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் -8 ஏ ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன; அவற்றைப் பெற்று, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களே, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் என்பதால், அவர்களிடமே விண்ணப்பத்தைப் பெற்று, முறைப்படி பூர்த்தி செய்து கொடுக்கலாம்; ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய இயலாது. அவர்கள், பெயர் நீக்கம் செய்யவும், பெயர் சேர்க்கவும் அந்தந்த தொகுதியில் புதிதாக படிவம் கொடுக்க வேண்டும். இந்த மாற்றங்களுக்கு இருப்பிடத்தில் வசிப்பதற்கான ஆவணங்களை விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டியது கட்டாயம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட ௨௪ இணையதள மையங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது; அதை பயன்படுத்திக்கொள்ளலாம். இது தவிர www.election.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்காமல், பெயர் இருந்தும் ஓட்டுப்போடாமல் இருந்து விட்டு அரசையோ, அரசியல்வாதிகளையோ, திட்டங்களையோ விமர்சிப்பதால் எந்த பயனுமில்லை; இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிடினும், இனியாவது பெயர் சேர்த்து, தகுதியான வேட்பாளரைத் தேர்வு செய்வதே, இந்த தேசத்தின் மீது உண்மையான அக்கறையுள்ளவர்கள் செய்யும் செயலாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக