லேபிள்கள்

23.4.15

பிளஸ்-2, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

பிளஸ்–2 தேர்வுகள் மார்ச்–5–ந்தேதி தொடங்கி மார்ச் 31–ந்தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 19–ந்தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 10–ந்தேதி வரை
நடைபெற்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வை 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 மாணவர்களும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகள் உள்பட 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 பேரும், எஸ்.எஸ்.எல்.சி, தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 மாணவர்களும், 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதினர். 

இந்த நிலையில், : பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சபிதா இன்று வெளியிட்டார். இதன் படி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் மே 7 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 21 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை, www. tnresults.nic.in ,www.dge.tn.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளை  மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக