பிரதான கோரிக்கைகள் குறித்து பேச, குழு அமைப்பதாக, அமைச்சர் கூறியதை ஏற்று, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்திக் கொண்டோம்' என, தமிழ்நாடு
சத்துணவு ஊழியர் சங்கம் மாநில தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார். காலவரைமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஓய்வூதியமாக குறைந்தபட்சம், 3,500 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டது. சங்க நிர்வாகிகள், நேற்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் வளர்மதியை சந்தித்து பேசினர்.அதன்பின், சங்க மாநில தலைவர் பழனிச்சாமி, நிருபர்களிடம் கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்; அதில், 12 கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டது. ஓரிரு நாளில், அரசாணை வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு, 30 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். பிரதான கோரிக்கைகளான, ஊதிய உயர்வு, குடும்ப ஓய்வூதியம், ஆகியவை குறித்து பேச, குழு அமைக்கவும், பேச்சு மூலம் அவற்றுக்கு தீர்வு காணலாம் என, அமைச்சர் தெரிவித்தார். அதை ஏற்று, போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம்; போராட்டத்தை வாபஸ்பெறும்படி, எங்களை யாரும் நிர்பந்திக்கவில்லை; எங்கள் போராட்டத்திற்கு, வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவி, தமிழ்செல்வி கூறும்போது,' 'தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவித்ததால், அமைச்சர்கள் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசினர். 12 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர். மற்ற பிரச்னைகளை, சுமுகமாக பேசி தீர்வு காண, முடிவு செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக