ஊதிய உயர்வுக்காகப் போராடி வரும் ஆசிரியர்களின் கூட்டமைப்பினருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ 15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராடிக் கொண்டிருக்கிறது.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக 6-ஆவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி தமிழக ஆசிரியர்களுக்கு ஊதியம், ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஆசிரியர்களின் பணி வரன்முறை செய்து, அவர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட 15 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்த நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டுத் தீர்த்து வைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுடன் எவ்வித தாமதமும் இல்லாமல் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக