கல்விக் கடன் திட்டத்தின் செயல் பாடுகள் மற்றும் அதிலுள்ள குளறுபடிகள் குறித்து சர்வே நடத்துவதற்காக குழு ஒன்றை
அமைத்திருக்கிறது மத்திய அரசு.நாடு முழுவதும் கல்விக் கடன் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிலுள்ள குளறுபடிகள் குறித்து மாணவர்கள் மற்றும் வங்கி அதிகாரி கள் தரப்பில் சர்வே நடத்தி அறிக்கை அளிப்பதற்காக பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தின் (Indian Institute Of Management) சேர்க்கை மற்றும் பொருளாதார ஆய்வு மையத்தின் தலைவர் எம்.ஜெயதேவ் தலைமையில் குழு ஒன்றைஅமைத்திருக்கிறதுமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்.
இது தொடர்பாக கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் முதன்மை இணைப்பாளர் ராஜ் குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கல்விக் கடனுக்காக மாணவர்களை மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிஉச்ச நீதிமன் றத்தின் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு மேல் முறையீடு செய்திருக்கிறோம்.முன்பு, கல்விக் கடன் விவகாரத் தில் அலட்சியம் காட்டிய அதிகாரி கள் இப்போது மக்கள் விழித்துக் கொண்டதால் பொறுமையாக பதில் சொல்கின்றனர். பிரச்சினைகளை சுமுகமாக முடிக்கப் பார்க்கின்றனர். இது ஒரு நல்ல மாற்றம். மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு அதிகரித் தால் கல்விக் கடன் விவகாரத்தில் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் விதிப்படி நடக்க வேண் டிய கட்டாயத்தை உருவாக்கமுடியும்.
தவணைக் காலம்
ரு.7.5 லட்சத்துக்கான கல்விக் கடன்களுக்கு மட்டும்தான் 15 ஆண்டுகள் தவணைக் காலம் கொடுக்கின்றனர். அதற்கு கீழான தொகைக்கு தவணைக் காலம் சுருக்கப்படுவதால் தவணைத் தொகை அதிகரிக்கிறது. இதனா லேயே பலரால் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த முடிவதில்லை. இதைப் புரிந்துகொண்டு, சமீபத்தில் ஒன்றிரண்டு வங்கிகள் மட்டும், ரூ.2 லட்சத்துக்கும் குறைவான கல்விக் கடனையும் 15 ஆண்டுகளில் திருப் பிச் செலுத்தலாம் என அறிவித் திருக்கின்றன.அனைத்து வங்கி களும் இப்படி அறிவித்தால் கல்விக் கடன் தொகை பெருமளவு வசூலாகும்.நாடு முழுவதும் கல்விக் கடன் விவகாரத்தில் நடந்து கொண்டி ருக்கும் குளறுபடிகளை களைவதற் காகத்தான் மத்திய அரசு முனை வர் எம்.ஜெயதேவ் குழுவை அமைத் திருக்கிறது. நேரடி முகாம்கள், ஆன்லைன் கேள்விகள், அலைபேசி விசாரணைகள் மூலமாக சர்வே பணியை மேற்கொண்டு முடிவில் அரசுக்கு அறிக்கை அளிக்க இருப்பதாக ஜெயதேவ் எங்களிடம் தெரிவித்தார். கல்விக் கடன் குளறுபடிகள் மற்றும் புகார்கள் தொடர்பாக எங்களிடம் இருந்த விவரங்களை நாங்கள் அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக