லேபிள்கள்

23.4.15

கழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி, ஆசிரியைகள் உள்பட 8 பேர் கைது

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள பண்டிதன் குறிச்சியில் இந்து உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 18 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த 8 மாதத்திற்கும் மேலாக, அந்த பள்ளியில் படிக்கும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களை, கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பதாக அப்பள்ளி ஆசிரியர்கள் மீது புகார் கூறப்பட்டது. இது குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனையடுத்து அந்த சமுதாயத்தை சேர்ந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், இதேபுகாரின் பேரில், 8 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால், என்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் பெயர்களை தெரிவிக்க மறுத்து விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக