‘ஸ்லெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். அந்த வகையில், தமிழகத்தில் நடத்தப்படும் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இங்குள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மட்டும் உதவி பேராசிரியர் பணியில் சேரலாம்.

ஸ்லெட் தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட பல்கலைக் கழகத்துக்கு குறிப்பிட்ட ஆண்டு கள் வழங்கப்படும். கடைசியாக கோவை பாரதியார் பல்கலைக் கழகம் ஸ்லெட் தேர்வை நடத் தியது. அதற்கு முன்பாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இத்தேர்வை நடத்தியது.
துணைவேந்தர் தகவல்
இந்த நிலையில், 2015 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஸ்லெட் தேர்வு நடத்த கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழ கத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை கே.மணிமேகலை ‘தி இந்து'விடம் கூறியதாவது:
2015 முதல் 2018-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளுக்கு ஸ்லெட் தேர்வை நடத்துவதற்கு எங்கள் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த அனுமதியை எங்கள் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த பெரிய கவுரவமாக கருதுகிறோம்.
ஸ்லெட் தேர்வை நடத்து வதற்கு வழிநடத்தும் குழு (ஸ்டீயரிங் கமிட்டி) மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும். இதில் அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), இதர பல்கலைக்கழகம் சார்பில் இடம்பெறுபவர்கள் தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.
அரசின் ஒப்புதல் கிடைத்ததும் ஸ்லெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளி யிடப்படும். அநேகமாக ஜூன் இறுதியில் தேர்வு நடத்தப்படலாம்.
தேசிய அளவில் நடத்தப்படும் ‘நெட்' தேர்வுக்கான அதே கல்வித்தகுதி, மதிப்பெண் தகுதி, வயது வரம்பு விதிமுறைகள் ஸ்லெட் தேர்விலும் பின்பற்றப்படும். எவ்வாறு ‘நெட்' தேர்வு ஆண்டுக்கு இரண்டு தடவை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறதோ, அதேபோன்று ஸ்லெட் தேர்வையும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு பேராசிரியை மணிமேகலை கூறினார்.