லேபிள்கள்

1.6.14

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு: கடும் வெயிலால், தள்ளிவைக்க வலியுறுத்தல் - கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும், நாளை, 2ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும் அதில் எந்த மாற்றமும் இல்லை' பள்ளிக்கல்வி இயக்குனர்

பள்ளி கல்வித் துறை அறிவிப்புப்படி, தமிழகம் முழுவதும், நாளை (2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால், 'அக்னி நட்சத்திரம் முடிந்தும், வெயிலின் கொடுமை நீடிப்பதால், பள்ளி திறப்பு தேதியை, 10 நாட்களுக்கு, தள்ளிவைக்க வேண்டும்' என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். 'பத்தாம் வகுப்பு மாணவர்கள், வெயிலால் பாதிக்கக்கூடாது என, பொது தேர்வு நேரத்தை, ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றிய தமிழக அரசு, இப்போது, மவுனம் காப்பது ஏன்?' என, ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எந்த மாற்றமும் இல்லை:'கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும், நாளை, 2ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், ஏற்கனவே அறிவித்து இருந்தார். கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை சுட்டிக்காட்டி, 'பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் வருமா?' என, சில தினங்களுக்கு முன், இயக்குனரிடம், நிருபர்கள் கேட்டதற்கு, 'எந்த மாற்றமும் இல்லை; அறிவித்தபடி, 2ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும்' என, இயக்குனர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக