லேபிள்கள்

7.6.14

பிளஸ்–2 விடைத்தாள் நகல் வெளியீட்டில் குளறுபடி, பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதாக தேர்வுத்துறை இயக்குனர் உறுதி

பிளஸ்–2 விடைத்தாள் விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டதில் குளறுபடி நடந்தது. ஒரு மாணவரின் விடைத்தாள் மற்றொரு மாணவருக்கு கிடைத்துள்ளது.

இப்படி 45 மாணவர்களுக்கு மட்டும் குளறுபடி நடந்ததாகவும் அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் காணப்படும் என்றும் மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

இது பிரச்சினை குறித்து தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் கூறியதாவது:–

விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு விடைத்தாள் மாற்றப்பட்டு இணையதளத்தில் இருக்கலாம். அவை சரி செய்யப்பட்டு மாணவர்களுக்கு இணையதளத்தில் வெளியிட்ட பின்னர்தான் விடைத்தாள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தேதி தரப்படும். மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப் பட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் ஒரு அதிகாரி கூறுகையில் மருத்துவ கலந்தாய்விற்கோ அல்லது என்ஜினீயரிங் கலந்தாய்விற்கோ அவை தொடங்கும் முன்பாக மாணவர்களின் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டு மதிப்பெண் அனுப்பப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக