திருப்பூர் மாவட்டத்தில், முறையான அனுமதி பெறாமல், அடிப்படை வசதிகளின்றி இயங்கி வந்த, 12 மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளை, வரும் கல்வியாண்டு முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 மற்றும் விதி 2011ன் படியும், திருப்பூர் மாவட்டத்தில், அடிப்படை வசதிகள் இல்லாமல், அனுமதி பெறாமல், பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டு வந்த 12 மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகளை, 2014-- 15ம் கல்வியாண்டு முதல் மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
1. அவிநாசி அருகே உள்ள சேவூரில் உள்ள ஆகாஸ் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி.2. உடுமலை ஒன்றியம், பெரியகடை வீதி எல்.எஸ்., மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி3. உடுமலை ஒன்றியம், தில்லை நகர் ராயல் லெட்சுமி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி4. உடுமலை ஒன்றியம், சிவசக்தி காலனி சன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள்5. திருப்பூர் அங்கேரிபாளையம் கவிபாரதி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி.6. திருப்பூர் தெற்கு ஒன்றியம் ராஜவீதியில் உள்ள நேரு மழலையர் துவக்கப்பள்ளி.7. புதூர் ரோடு சுப்பிரமணியம் நகர் முதல் வீதியில் உள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி.8. நல்லூர் முத்தணம்பாளையத்தில் உள்ள கிட்ஸ் பார்க் மழலையர் மற்றும் துவக்க பள்ளி.9. நடுப்பங்கு தோட்டத்தில் உள்ள ஸ்ட்ராபெரி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி.10. கருவம்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி.11.பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள கீ ஸ்டேஜ் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி.12. தாராபுரம் ஒன்றியம் அலங்கியத்தில் உள்ள ஜெம் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி என, மாவட்ட அளவில் 12 மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் வரும் கல்வியாண்டுமுதல் மூட, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக