லேபிள்கள்

6.6.14

மாணவர்கள் வராததால்அரசு பள்ளிக்கு 'பூட்டு' - தினமலர்

திருவாடானை அருகே ஒரு மாணவர்கள் கூட வராததால், அரசு துவக்கப்பள்ளி இழுத்து பூட்டப்பட்டுள்ளது.ராமநாதபுரம் திருவாடானை அருகே டி.கிளியூரில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்தாண்டு ஒரு மாணவி மட்டும் படித்தார்.
அவரும், வேறு பள்ளிக்கு சென்று விட்டதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த போது ஒரு மாணவர் கூட சேரவில்லை. தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டுமே பள்ளியை திறப்பதும், மூடுவதாக இருந்தார். இது குறித்து தினமலரில் ஜூன் 3ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.
பள்ளியை ஆய்வு செய்த அதிகாரிகள் ஒரு மாணவர் கூட இல்லாததால் பள்ளியை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர். பணியில் இருந்த தலைமை ஆசிரியை சத்யா, பனஞ்சாயல் அரசு துவக்கபள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.உதவி கல்வி அலுவலர் அண்ணாதுரை கூறியதாவது: பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. இப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறித்து கிராம மக்களுடன் பேசி வருகிறோம். குறைந்தது ஒரு பள்ளியில் 30 மாணவர்களாவது இருக்கவேண்டும். மீண்டும் மாணவர்கள் சேரும் பட்சத்தில் பள்ளி உடனடியாக திறக்கப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக