புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசு தொடக்கப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கிலம், தமிழ் வழி கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்கள் தமிழக கல்வி வாரியத்துடனும், மாகி கேரள மாநில கல்வி வாரியம், ஏனாம் ஆந்திரா கல்வி வாரியத்துடன் இணைந்துள்ளது.
புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் வரும் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் ஆங்கில வழி துவக்கப்பள்ளிகளில் அதாவது 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்திற்கு பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.இது குறித்து கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் ஆங்கில வழி கல்வியை பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும், தமிழ் வழி பள்ளிகளில் 1ம் வகுப்பு மட்டும் சிபிஎஸ்இ கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் பின்னர் படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகள் அதிகரிக்கப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது’ என்றார். சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பதால் இந்தி மொழிப்பாடம் அவசியம் குறித்து கேட்ட போது, அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழியே மொழி பாடமாக வைத்துக்கொள் ளலாம். புதுச் சேரியில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகியவை மொழிப்பாடமாக இருக்கும். பெற்றோர் விருப்பப்பட் டால் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளை பாடமாக எடுத்துக்கொள்ளலாம்‘ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக